தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பண்பண்ணை ஆகிய கிராமங்களில் இன்று கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த கொடி அணிவகுப்பிற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பானது கொங்கராயகுறிச்சி மெயின் ரோட்டில் துவங்கி வேத கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சென்று அணிவகுப்பு நிறைவடைந்தது.
மேலும் இதுபோல ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், அந்தோணி திலிப், கருத்தையா உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 60 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 20 பேர், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.


