கொங்கராயகுறிச்சி சிவன் கோயிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திருச்செந்தூர் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் வடமலை பாண்டியன் பங்கேற்பு.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோவிலில் இன்று வளர்பிறை அஷ்டமி நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜை மலர்களின் அலங்காரத்துடன் நடந்தது.
இந்நிலையில் அப்பொழுது அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் வடமலை பாண்டியன் சுவாமி தரிசனம் செய்தார். அவர் நடந்த சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மனோகரன், கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்பிரமணியன், மணிகண்டன் கொங்கராயகுறிச்சி ஊராட்சி செயலாளர் சாகுல் அமீது மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


