தமிழகம் ஊழல்வாதிகள் லஞ்சப்பெருச்சாளிகள் கொள்ளைக் காரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. ஆழ்வார்திருநகரியில் நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் குளோரியான் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகம் ஊழல்வாதிகள் லஞ்சப் பெருச்சாளிகள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் எட்டு அமைச்சர்களை கொண்டு எளிமையான ஆட்சி நடந்தது. தற்போது முதல்வர் வீட்டை விட்டுக் கிளம்பியதும் அவரை தொடர்ந்து முன்னாள் 100 கார் பின்னால் 100 கார் காவல் பணிக்கு செல்கிறது. உயிர்காக்கும் மருத்துவம் சந்தையாகி போனது. அரை நூற்றாண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். படித்த படிக்காத மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு தருகிறோம். நல்ல மருத்துவம், தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு பாதுகாப்பு என அனைத்தையும் தருகிறோம். நாம் தமிழர் கட்சியின் வெற்றி இனத்தின் வெற்றி தன்மானத்தின் வெற்றி. நாங்கள் கையேந்தி கேட்பது வாக்கை அல்ல. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை. என்றார் அவர்.


