
அனவரதநல்லூரில் குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய இருவர் கைது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனவரதநல்லூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமாடன் மகன் பாலராஜன் (34). இவரது வீட்டின் முன்பு 07.03.2021 அன்று அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் பிரபு (29) மற்றும் ராமச்சந்திரன் (21) ஆகியோர் குடிபோதையில் கெட்ட வார்த்தை பேசி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பாலராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து பாலராஜனை காலால் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து பாலராஜன் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட் வழக்கு பதிவு செய்து பிரபு மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.