தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொ£குதியாக ஸ்ரீவைகுண்டம் உள்ளது. தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளதால் இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம்.
விஐபி அந்தஸ்தை பெற்ற இந்த தொகுதியில் சி.பா. ஆதித்தனார், ஏ.பி.சி.வீரபாகு போன்ற முக்கிய தலைவர்கள் வென்றுள்ளனர். இந்த தொகுதியில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். நவத்திருப்பதி, நவகைலாயம் போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளன.
ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 3 தாலுக்காக்களை உள்ளடக்கிய தொகுதியாகவும் உள்ளது. மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால் அந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. Êசாத்தான்குளம் தாலுகா முழுவதும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுக்காக்களில் பகுதியளவு இந்த தொகுதியில் உள்ளன. சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், ஏரல், ஆழ்வார்திருநகரி போன்ற பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.
இந்த தொகுதி 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 இடைத்தேர்தலையும் சேர்த்து 15 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வீரபாகு வென்றுள்ளார். திமுக 3 முறையும் வென்றுள்ளது. 1967, 1971 தேர்தல்களில் திமுக சார்பில் சி.பா.ஆதித்தனார் வென்றுள்ளார். அடுத்ததாக அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 132 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13ஆயிரத்து 622 பேரும், 3ம் பாலினத்தவர்கள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாடார்கள் 40 சதவீமும், பிள்ளைமார்கள், பட்டியல் இனத்தவர்கள் தலா 20 சதவீதமும், அடுத்த படியாக தேவர் இன மக்களும் உள்னனர். இது தவிர ஏனைய சமுதாய மக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்த ஏரல் தனித்தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பகுதியில் வாழை விவசாயம் அதிகம். வாழைத்தார்களுக்கு உரிய விரை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைபடுகின்றனர். எனவே வாழைக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி இரண்டு அணைக்கட்டுகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. Ñருதூர் அணை மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பிரிவும் 53 பாசன குளங்கள் மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணைகள் மற்றும் 53 பாசன குளங்கள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் வெள்ளநீரை உரிய முறையில் சேமித்து வைக்க முடியாமல் உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குரையும், மழைக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான கன அடி நீர் வீணாக ஆண்டுதோறும் கடலில் கலக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள், நவக்கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் சிவன் கோவில் என ஆன்மீக தலங்கள் உள்ளன. னுனவே ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் படகு குழாம் அமைக்க வேண்டும், சுற்றுலாத்தலமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி மேம்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.
1957, 1962 ல் ஏ.பி.சி.வீரபாகு காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1967, 1971 ல் சி.பா.ஆதித்தனார் திமுக சார்பிலும், 1977 ல் சாது செல்வராஜ் அதிமுக சார்பிலும், 1980 ராமசுப்பிரமணியன் அதிமுக சார்பிலும், 1984, 1989, 1991 ல் டேனியல் ராஜ் காங்கிரஸ் சார்பிலும், 1996 ல் டேவிட் செல்வின் திமுக சார்பிலும், 2001 ல் சண்முகநாதன் அதிமுக சார்பிலும், 2006 ல் ஊர்வசி அமிர்தராஜ் காங்கிரஸ் சார்பிலும், 2009 ல் சுடலையாண்டி காங்கிரஸ் சார்பிலும், 2011 மற்றும் 2016 வரை சண்முகநாதன் அதிமுக சார்பிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் 65198 வாக்குகள் பெற்றிருந்தார். அவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன் 61667 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் 3531 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வெற்றி பெற்றார்.
கடந்த 2016 ல் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தனது தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தாமிரபரணி, மணிமுத்தாறு உள்பட மூன்று ஆறுகளை இணைத்து வெள்ளநீர் கால்வாய் திட்டம் மூலம் சாத்தான்குளம், திசையன் விளை போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தார். கிராமபுறங்களில் சாலைவசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். வருடம் தோறும் அறுவடை காலங்களில் சாத்தான்குளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
தற்போது இந்தாண்டு நடைபெறும் இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சண்முகநாதனும் இந்த முறை போட்டியிடுகிறார். இதை தவிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் மகன் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார்.
இதனை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஏரல் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சுப்பையா பாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சேகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்


