கருங்குளம் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் மூலம் கூட்டு பண்ணையக்குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டாரத்தில் செக்காரக்குடி மற்றும் மணக்கரை கிராமத்தில் கூட்டுப்பண்ணையக் குழு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டுப்பண்ணையக் குழு திறன் வளர்த்தல் பயிற்சியில் டிவிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலர் மிஸ்ரா கலந்து கொண்டு குழு உறுப்பினர்களுக்கு தீர்மான பதிவேடு, கடன் பதிவேடு, ரொக்க பதிவேடு போன்ற பதிவேடுகள் பராமரிப்பு முறை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சுயதொழில் தொடங்கிட ஏதுவாக பயிற்சி அளித்தார். பயிற்சியின் இறுதியில் வல்லநாடு வேளாண்மை விரிவாக்க மைய து¬ணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.
இந்த பயிற்சியில் செக்காரக்குடி மற்றும் மணக்கரை கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி அலுவலர் வெங்கடேஷ், திருவேணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


