தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் திடலில் இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்கம் மற்றும் செந்தமிழ் கல்வி அறக்கட்டளை சார்பில் கால்நடை வளர்ப்பு, இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சி திருமூலநாதர் பக்தர் பேரவை இறைவணக்கத்துடன் துவங்கியது. சமூக சேவகர் நங்கமுத்து வரவேற்றார். கருங்குளம் ஒன்றியச் சேர்மன் கோமதி ராஜேந்திரன், துணைச்சேர்மன் லெட்சுமண பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்கத்தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
வாகைகுளம் ஸ்காட்ட குழும கோபால், ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் விமல்குமார், டிவிஎஸ் அறக்கட்டளை கள இயக்குநர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் பாஸ்கர், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனித வள மேம்பாட்டு பயிற்றிசியாளர் இசக்கி முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு விடிவிடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான வாள் வீச்சு, சிலம்பரம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. அதே போல் தூத்துக்குடி வஉசி கல்லூரி கலைக்குழு மாணவர்களின் பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்றைய சூழலில் இயற்கை வேளாண்மை சாத்தியமா சாத்தியமில்லையா என்ற தலைவர் பொன் பாண்டி கனிராஜன் நடத்திய பட்டிமன்றமும், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா வாங்கிய வேளாண்மைத் தொழில செய்வதற்கு இளைஞர்கள் முன் வருகிறார்களா, முன்வரவில்லையா என்ற தலைப்பில் விவாத அரங்கமும் நடந்தது. வல்லநாடு இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்கபொருளாளர் பாக்கியம் நன்றி கூறினார்.
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


