தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அதிகாலையில் பல்வேறு யாகபூஜைகள் நடந்தது. அதன்பின்னர் கொடிப்பட்டம் கோவில் வளாகத்தில் வலம் வந்தது. சேர்மன் அருணாசல சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றுமு ஆராதனை நடந்தது. அதன்பின்னர் கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்குதர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அருணாசல சுவாமிகள் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


