தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் பாலு. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்பவர் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்டித்தார் பாலு. இதனால் பாலு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்த எஸ்.ஐ.பாலுவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சேரகுளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த பாலுவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஐ.முத்துகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், தலைமை காவலர் நிறைகுளத்தான், இசக்கி ராஜா, சாதுசுந்தர்சிங், முதல்நிலை காவலர் வெங்கடேசன், செல்வம், காவலர் வெங்கடேஷ், முரளி உள்பட போலிசார் கலந்து கொண்டனர்.


