தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் பாலு. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடித்து விட்டு வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்பவர் தகராறில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்டித்தார் பாலு. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகவேல் நேற்று நள்ளிரவு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்த எஸ்.ஐ.பாலுவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த எஸ்.ஐ. பாலுவிற்கு செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பாலுவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், தலைமை காவலர் பாலசிங், சுபானந்தம், முதல்நிலை காவலர் செல்வகுமார், லெட்சுமி உள்பட போலிசார் கலந்து கொண்டனர்.


