அசம்பாவிதங்களை தடுக்க செய்துங்கநல்லூர் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை.
ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் பிச்சை பூபாலராயர், பொருளாளர் பால்சாமி முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் இரவு நேரங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் 10 மணிக்கு கடைகளை மூடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் ஆய்வாளர் பைசல், உபதலைவர் சுடலைமணி, உதவி பொருளாளர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


