
கருங்குளத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சந்திரா தலைமை வகித்தார். உமா ஈஸ்வரி, மேரி ஜெனிலா, மயிலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமாரி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருங்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பணியாளர்கள் 110 பேரும், உதவியாளர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரியும், முறையான ஓய்வூதியம் வழங்க கோரியும், பணிக்கொடை ஊழியருக்கு 10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சமும் வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின்னர் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டபடி கருங்குளம் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இறுதியில் வேலம்மாள் நன்றி கூறினார்.