கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் அலுவலகம் சார்பாக இன்று ஏழை பெண்கள், முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள் விதவை பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 100 நபர்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அதன்பின்னர் இலவச சேலைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் மற்றும் கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சுசிலா வரவேற்புரை வழங்கினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் மீனாட்சி, செல்வமணி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஜெபமணி நன்றி கூறினார்.


