மேல ஆழ்வார்தோப்பில் குடும்ப நலன் மற்றும் கிராமங்களின் நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் இன்று குடும்ப நலன் மற்றும் கிராமங்களின் நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கை கிராம உதய நிறுவனரும், இயக்குநருமான டாக்டர் சுந்தரேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம உதய கிளை மேலாளர் வேல்முருகன், கோரம்பள்ளம் மையத்தலைவர் கலாவதி, ஆதாளிகுளம் மையத்தலைவர் சக்திகனி, கீழப்புதுக்குடி மையத்தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம உதய தன்னார்வ தொண்டர் ஜெயபார்வதி வரவேற்புரை ஆற்றினார். கிராம உதய தனி அலுவலர் ராமச்சந்திரன், சிறப்பு பொறுப்பாளர் சித்திரை பெருமாள், பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தன்னார்வ தொண்டர் ஆறுமுககனி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கிராம உதய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


