செய்துங்கநல்லூர் அருகே ஆறாம்பண்ணையில் கோழிப் பண்ணையில் புகுந்து 5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு தகவலறிந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து சென்றனர்,
ஆறாம்பண்ணையில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றித்திரிந்த மலைப்பாம்பு நேற்று ஆறாம்பண்ணை முகமது உதுமான் மகன் முகமது காசிம், இவர் பள்ளிவாசல் பின்புறம் ஆற்றுக்கு செல்லும் வழியில் நாட்டுக்கோழி பண்ணை அமைத்து நூறுக்கும் மேலான நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார், இவர் பண்ணைக்கு வந்து கோழிகள் சத்தத்தை கேட்டு முகமது காசிம் பார்த்தபொழுது கோழிப் பண்ணைக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஐந்து கோழிகளை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி கொண்டிருந்ததை கண்டார், உடனடியாக முகமது காசிம் வல்லநாடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார், தகவலறிந்த வனத்துறையினர் ஆறாம்பண்ணை கோழி பண்ணைக்கு வந்து மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.


