செய்துங்கநல்லூர் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் திமுக சார்பில் விடியலை நோக்கி நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் இன்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், திமுக தேர்தல் பணிக்குழு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வை கொண்டு வந்தது இந்த மோடி ஆட்சி. இதன் காரணமாகத்தான் ஏராளமான மாணவர்கள் இறந்தார்கள்.
திமுக வேளாண் சட்டத்தை எதிர்க்கிறது. காரணம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக துணை போகிறது. இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ளது ஒன்று மக்கள் அரசியல் மற்றொன்று கார்ப்பரேட் அரசியல். ஆன்மீக அரசியல் எல்லாம் டுபாக்கூர் அரசியல். ஆன்மீக அரசியல் எல்லாம் கூற மட்டும்தான் முடியும். செயலில் காட்ட முடியாது. ஆன்மீக அரசியலுக்கு தமிழகத்தில் இரண்டு சதவீத ஓட்டு தான் உள்ளது.
வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றும்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் நடந்த விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் தெற்குஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கிபாண்டியன் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர்,
அவைத் தலைவர் அருணாசலம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, ஜெகன்
வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் களில்ரகுமான்,
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் அப்துல்கரீம், முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன், முன்னாள் அவைத்தலைவர் பட்டன், ஒன்றிய அவைத் துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாவட்ட பிரதிநிதி வெள்ளூர் ராமலிங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் லட்சுமணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் ரங்கன், சேக் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி மகாராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனராஜ் ,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் இசக்கிமுத்து ,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வெங்கடேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கந்தகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


