ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. அதற்காக இடத்தினை தேர்வு செய்ய இன்று மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தொடரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி தமிழக அரசு சார்பில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணி துவங்கியது. அந்த அகழாய்வு பணியில் 1000க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் இன்றைய தினம் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியாக இடம் தேர்வு செய்யும் பணிக்காக வருகை தந்தனர். அவர்களுடன் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், மத்திய தொல்லியல் அதிகாரி அறவாழி, தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங் ஹாலோன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், பாலகிருஷ்ணன், சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் லோகநாதன், சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், தங்கதுரை வருகை தந்தனர். அவர்களுடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளை மாணிக்கம், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசுப்பு, மணிமாலா, சிவராமன், லூர்து பிரான்சிஸ், சர்வேயர் அண்ணாமலை உள்பட பலர் உடன் வந்திருந்தனர்.
மத்திய தொல்லியல் குழுவினர் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக 5 இடங்களை பார்வையிட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொல்லியல் துறை மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தெரிவிக்கையில்,
கடந்த மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் எங்கள் குழுவினர் ஆதிச்சநல்லூர் இடத்தினை தேர்வு செய்ய வருகை தந்துள்ளோம். நாங்கள் 5 இடத்தினை பார்வையிட்டுள்ளோம். மூன்று மாத காலங்களில் இதற்கான ஆரம்ப பணிகள் துவங்கும். இதற்கிடையில் புளியங்குளத்தில் மாநில அரசு சார்பில் 25 லட்சம் மதிப்பில் முதுமககள் தாழி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையத்தில் முதல் கட்டமாக தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்படும் , ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட பொருட்கள் இந்த இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் , உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக பணிகள் நிறைவடைந்த பின்னர் முற்காலத்தில் இங்கு அகழாய்வு நடந்த போது கிடைத்த பொருள்களையும் கொண்டு வந்து இங்கு காட்சிககு வைகக எடுக்கப்படும். மேலும் முககிய ஊர்களில் இருந்து ஆதிச்சநல்லூர் வரும் வழியில் வழிகாட்டி அலுவலகம் மற்றும் வழிகாட்டி பலகை வைககவும் நடவடிககை எடுககபடும் என்று தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமையும் போது ஏராளமானோர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் இதன் சுற்று வட்டாரப்பகுதிகள் சுற்றுலாத்தலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.


