ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடந்தது.
தமிழகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது.
இதற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமிற்காக விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி ஸ்ரீவைகுண்டம் வருவாய்த்துறைக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கருங்குளம், புளியங்குளம் பகுதியில் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரச்சுரம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதி வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆழ்வார் தோப்பு கிளை கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.


