தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
இதற்கிடையில் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தில் உள்ள குளத்தின் மதகு உடைந்தது. இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தும் வெளியேறியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் அதனை அடைத்தனர். இதனால் அதிக அளவு தண்ணீர் வீணாகி போனது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


