வருகின்ற காலம் மழை காலம் என்பதால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஸ்ரீவைகுண்டம் வருவாய்த்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் டிவிஎஸ் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 மணல் மூட்டைகளை வழங்கினார்கள். இதனை ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் வாழ்த்தினார்கள்.


