10 ரூபாயிக்கு நவீன முக கவசம் வழங்க ஏற்பாடுபிரான்ஸ் நாட்டு லூயிஸ் பாஸ்டியர் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் ஆய்வாளர். இவர் நுண்ணுயல் தந்தை என அன்பாக அழைக்கப்படுகிறார். இவர் 1859ல் ஒரு குடுவையில் ஆங்கில எழுத்து “S” போன்ற ஒரு குழாயை இணைத்தார். இந்த குடுவைக்கு வாத்துக் கழுத்து குடுவை எனப் பெயர். மேலும் இந்த ‘S” போன்ற குழாயைத் தாண்டி குடுவைக்குள் நுண்கிருமிகள் போக முடியாததைக் கண்டுபிடித்தார்.
இந்த மாதிரி நுண்கிருமிகள் நுழைய முடியாத ஒரு முகக்கவசம் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் ஈசன் சிவனையா தலைமையிலான முயற்சியில் கண்டுபிடிக்கப் பட்டது. இதனை ஒயோ முகக்கவசம் (OOYOO Mask) என அழைக்கப்படுகிறது.
இதனை நம் நெற்றியில் அணிந்தால் கண், மூக்கு, வாய் என் முகத்தை நன்கு மறைத்துக் கொள்ளும். வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நம்மை அண்ட முடியாது.
இதனைச் செய்ய ஒரு A4 காகிதம் அளவில் சற்று தடிமனான ஒரு பிளாஸ்டிக் காகிதத் துண்டு வேண்டும். இத்தகைய பிளாஸ்டிக் காகிதத் துண்டை OHP sheet என அழைப்பார்கள். இது காகிதம், பேனா, பென்சில் போன்ற பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும். இந்த பிளாஸ்டிக் காகிதத்தை முறைப்படி மடித்து ஒரு கயிருடன் இணைத்து இந்த முகக்கவசத்தைச் செய்யலாம். எலாஸ்டிக் பட்டையையும் கயிறாகப் பயன் படுத்தலாம்.
இதனை பத்து ரூபாய்க்கும் குறைவான செலவில் கீழ்க் கண்ட இணையத்தில் உள்ள குறும் படத்தைப் பார்த்து நாமே செய்து கொள்ளலாம்.
https://www.ooyoo.co.jp/en
https://www.linkedin.com/company/66740852/admin/
https://www.youtube.com/channel/UC00DYvCymCzSbXwx6AKtY8A
https://www.facebook.com/ooyoojp
இந்த முகக்கவசம் பாதுகாப்பு காப்பானது.
இதனை எளிதாகத் தயாரிக்கலாம்..
இந்த முகக்கவசத்தை அணிந்தால் நம் முகத்தை மற்றவர்கள் பார்க்கமுடியும்.
இதனை நீண்டநேரம் அணிந்து கொள்ள முடியும்.
இதனை அணிந்து கொண்டால் நீண்டநேரம் வசதியாக நடைப் பயிற்சி செய்யலாம்.
இந்த முகக்கவசத்தை சோப்பினால் சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன் படுத்தலாம்
இந்த தகவலை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர் தெரிவித்தார்.


