தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, எள், மக்காச்சோளம், பருத்தி ஆகி ய பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். புயல் , வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு மிகவும் அவசியமாகிறது. அதலால் மானாவாரி பயிர்களான உளுந்து , பாசிப்பயறு, கம்பு போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வரப்பெற்றுள்ளது. உளுந்து ஏக்கருக்கு 192 ரூபாய், பாசிப்பயறு ஏக்கருக்கு 192 ரூபாய் , கம்பு ஏக்கருக்கு 99 ரூபாய், மக்காச் சோளம் ஏக்கருக்கு 199 ரூபாய், எள் ஏக்கருக்கு 104 ரூபாய், பருத்தி ஏக்கருக்கு 539 ரூபாய் . இதில் உளுந்து , பாசிப்பயிறு, காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 16 தேதியும், கம்பு, எள் ஆகிய சாகுபடிக்கு காப்பீடு செய்ய கடைசிநாள் 18 ந்தேதி என்றும், மக்காச்சோளம், பருத்திக்கு வருகிற 21 ந்தேதியும் கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் பிரீமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது இ &சேவை மையங்களிலும் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் நில அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் செலுத்தலாம். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு நிறுவனமாக இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்திடவும் கடைசி கால நெருக்கடியை தவிர்த்திட விரைவில் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கருங்குளம் வட்டார வேளாண்மை அலுவலர் , துணைவேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.
&&&&¬


