செய்துங்கநல்லூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வருமான வரி செலுத்தாதோர் குடும்பங்களுக்கு மாதம் 7500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க கோரியும், கொரோனா கொடுமை நீடிக்கும் வரை நபருக்கு 10 கிலோ வீதம் உணவு தானியம் இலவசமாக வழங்க கோரியும், 100 நாள் வேலையை 200 நாளாக்கி அதனை நகர்புறத்துக்கு விரிவு படுத்தக்கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயளலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார். மணி, கண்ணன், மாரியப்பன், காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


