கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட முழுவதும் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கீழ சண்முகபுரத்தில் வானவில் ஸ்டோர் அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று 3 நாட்கள் தொடர்ச்சியாக நம்பகதன்மையுடைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட, 80 வருட பாரம்பரியமான கபசுர குடிநீரை அரசின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டது. கபசுர குடிநீரை தயார் செய்வதற்கு சுமார் 3 முதல் 4 மணி வரை செலவாகிறது. முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சண்முகபுரம் பகுதியில் சுமார் 5000 பேருக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் அந்தோணிராஜ், வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், ஜெயபால், இசையமைப்பாளர் சீலன் ஸ்ருதி பொன்.முருகன், பத்திரிகையாளர் செ.ஜெகஜீவன் மற்றும் தன்னார்வலர்கள் வக்கீல் சசிக்குமார், சங்கர், மணிமாறன், வினோத், பீர் முகம்மது நியாஸ், செல்வபாரதி, அமீர், அசோக், ஆல் கேன் செந்தில்குமார் பாலா உட்பட பலர் கலந்து கொன்டனர்.


