ஸ்ரீவைகுண்டத்தில் சிவாஜி கணேசன் 19வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் வைத்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
நகர தலைவர் அம்பிகாபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்த சிவ சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் செண்பகராஜ், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் அப்பாதுரை, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்


