செய்துங்கநல்லூர் அருகே சென்னல்பட்டி கிராமத்திலிருந்து மருதூர் அணைக்கட்டு விவசாய பாசனத்திற்கு முக்கியமான அணை கட்டாகும், அணைக்கட்டுக்கு செல்லும் சாலைவழியாக சீவலப்பேரி சென்றுவிடலாம், இந்த சாலை மிகவும் மோசமான நிலையிலும் சாலையின் இரு பக்கங்களிலும் முள் மரங்கள் ஆண்டுக்கணக்காக அகற்றப்படாமல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது முட்கள் கிழித்து காயப் படுத்துகின்றன, முள் மரங்கள் வளர்ந்து கிடப்பதால் பாதுகாப்பில்லாத சாலையாக இருக்கிறது, இந்த முள் மரங்களை வெட்ட ரொம்ப ஒண்ணும் செலவு செய்ய வேண்டாம் சென்னல்பட்டி கிராமத்தில் உள்ள 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை வைத்து முள் மரங்களை அகற்றிவிடலாம், சாலையும் குண்டும் குழியுமாக கிடக்கிறது, மருதூர் அணைக்கட்டு செல்லும் இந்த சாலை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சாலையை சீரமைக்கக்கோரி முள் மரங்களை அகற்ற கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம் , இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என சமூக ஆர்வலர், மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர், எனவே இதுகுறித்து யூனியன் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஞ்சாயத்து நிர்வாகிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைத்து மற்றும் முள் மரங்களையும் அகற்றினாள், இந்த சாலையை பயன்படுத்தும் பொது மக்களுக்கு நலன் பயக்கும் பாதுகாப்பளிக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்,


