உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 25ம் தேதி அகழாய்வு பணியானது துவங்கியது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் துறை லோகநாதன் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரைப் பொறுத்த வரை இன்றைய தினம் 6ம் நாளாக இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரில் நடந்து முடிந்த 5 அகழாய்வுகளில் அனைத்திலுமே முதுமக்கள் தாழிகளும், இரும்பு பொருட்களும் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் தாமிரபரணி கரை பாண்டிய ராஜாகோயில் அருகில் நடைபெறும் இந்த அகழ்வாய்வானது மிகவும் முக்கத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகவே இந்த அகழாய்வு பணியானது தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பகுதியில் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக 50 க்கு 50 என்ற அளவில் 2 குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த பகுதியில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்படும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ககிறார்கள்.


