வல்லநாடு பஸ் நிலையத்தில் வைத்து ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜி இலவச உணவு பொருள்களை வழங்கினார்.
கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். வல்லநாட்டில் வைத்து ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவுபொருள்கள் வழங்கினர். மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் , கருங்குளம் சேர்மன்கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் , சமூக ஆர்வலர் தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.