வல்லநாடு புறக்காவல் நிலையத்தில் வைத்து ஏழை எளிய மக்களுககு காவல் துறை சார்பில் உதவி வழங்கப்பட்டது.
முறப்பநாடு காவல்துறை ஆய்வாளர் பார்த்தீபன் தலைமையில் பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் முன்னிலையில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்பட பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


