செய்துங்கநல்லூர் அருகே கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து சார்பில், வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், வீடுவீடாக கிராமத்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொங்கராயகுறிச்சி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிவகுமார், கருங்குளம் யூனியன் ஒன்றிய ஆணையாளர் சுப்புலட்சுமி, வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், துணைத்தலைவர் சேர்ம துரை, இரண்டாவது வார்டு உறுப்பினர் கண்ணன், கிளார்க் பிராங்களின், ஒன்பதாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் மைமூன் அப்துல் கரீம், இந்த கபசுர குடிநீர் தெருக்களில் வீடு வீடாக சென்று கொடுத்த கொங்கராயகுறிச்சி தவ்ஹீத் ஜமாத்தின் தன்னார்வலர் தொண்டர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


