கருங்குளம் ஒன்றியம் கீழ வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஆறாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சார்பில் கிராமத்து மக்களுக்கு அரிசி மற்றும் மாஸ்க்குகள் வழங்கப்படும் நிகழ்ச்சியை கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இதனால் கிராமங்களில் ஆங்காங்கே தொண்டு நிறுவனம், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,சார்பாக அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து வருகிறார்கள், இதுபோல கீழ வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முத்து இசககி, மற்றும் கருங்குளம் யூனியன் ஆறாவது ஒன்றிய கவுன்சிலர் ராதா மாரியப்பன், சார்பில் அரிசி, மற்றும் முக கவசம், கீழ வல்லநாடு கிராமத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், பி டி ஓ சுப்புலட்சுமி, வெங்கடாச்சலம், துணை பிடிஓ ஸ்டீபன் ரத்தினகுமார், பஞ்சாயத்து தலைவர் முத்து இசக்கி, துணைத் தலைவர் சுரேஷ் காந்தி, ஆறாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ராதா மாரியப்பன், (திமுக) கருங்குளம் ஒன்றிய (திமுக) இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, மற்றும் வார்டு உறுப்பினர் ராஜகோபால் ,உள்பட பலர் கலந்து கொண்டனர்.


