செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆறாம்பண்ணை ஊராட்சி பகுதி மக்களுக்கு கபசுர குடிநீரை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் வழங்கினார்.
ஆறாம்பண்ணை ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொராணா வைரஸ், பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை ஊராட்சிமன்ற தலைவர் சேக அப்துல் காதர் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் ஆறாம்பண்ணை, பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிமக்களுக்கு வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவம் மூலமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிவகுமார்,ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், ஊர் நலச்சங்கம் தலைவர் சையது, வார்டு உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


