உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் பெருகி கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காரங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் ஸ்ரீராமன் தலைமையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன் ஆகியோர் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சித்தார்த்தன், ஆழ்வை விஜய மரியராஜ், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், வட்டார நிர்வாகிகள் மாரிமுத்து, தங்கவேல், கால்வாய் நடராஜன், வெங்கடேஷ், பொன்கிருஷ்ணன், சித்திரைபாண்டி, வனிதா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.