ஆறாம்பண்ணை ரேசன் கடையில் பொதுமக்களுக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சியை கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கிவைத்தார்.
ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு டோக்கன் கொடுத்து கூட்டம் போடாமல் மக்களுக்கு இலவச பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் 1000 ரூபாய் பணம், அரிசி, பருப்பு, பாமாயில் உள்பட பொருள்கள் வழங்கப்பட்டது. பொருள்கள் வழங்கும் பணியில் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், பஞ்சாயத்து துணை தலைவர் அப்துல் கனி, கிராம நிர்வாக அதிகாரி கமல்ராஜ், ரேசன் கடை ஊழியர் சீனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


