உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கருங்குளம் அருகே உள்ள சேரகுளம் மற்றும் இராமானுஜம்புதூர் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி மேற்பார்வையில் சேரகுளம், இராமானுஜம்புதூர் பகுதியில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதில் இராமானுஜம்புதூர் ஊராட்சிமன்றத்தலைவர் ரெங்கன், சேரகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்நாயகி மற்றும் பஞ்சாயத்து கிளார்க் பாரதி, இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சேரகுளம், இராமனுஜம்புதூர் பஞ்சாயத்துகளில் மூலை முடுக்குகளில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சுகாதர துறை மூலமாக வீடு வீடாக சர்ககரைநோயாளிகள் கணக்கெடுப்பு நடந்தது.
தொடர்ந்து கொரானாவால் பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


