தென்திருப்பேரையில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான தெருமுனைப்பிரச்சாரம் பேரணி உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் ராஜா, சசிகலா புஷ்பா, தம்பி ஆகியோர் பேசினர்.
பின்னர் சசிகலா புஷ்பா எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் உள்ளனர் அச்சட்டம் மக்களுக்கு எதிரான சட்டம் இல்லை என்பதை பொதுமக்களிடம் விளக்கமாக தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை பாஜக சார்பில் நடத்தப்பட உள்ளன திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத் திட்டங்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் அதனால் வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தொகுதி தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 பாஜக வெற்றி பெறும்.
இனிவரும் தேர்தல்களில் திமுக வெற்றிபெறப் போவதில்லை என்பதினால் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக ஆக முடியாது என தெரிவித்தார்.


