ஆழிகுடியில் மகா புஷ்கரத்தினை முன்னிட்டு ஆற்றங்கரையில் மாரடைச்சான் சுடலை கோயில் அருகில் புதிய ஆழி மகா புஷ்கர லிங்கம் மண்ணினால் உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் கடந்த 1 வருடமாகியும் மழையில் கரையாமல் இருப்பது அதிசயமாக இருந்தது. அந்த லிங்கத்துக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவனடியார் தளவாய் சாமி தலைமையில் நடந்த பூஜைக்கு அலங்காரம் ஆராதனை நான்கு கால பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தினேஷ், கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன், பழனிதேவர், பாண்டிதேவர், கணேசன், மாயாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.


