கருங்குளம் ஒன்றியத்தில் வல்லகுளம் பஞ்சாயத்து தலைவர் கமலம் வெற்றி பெற்றார். இவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.
உதவி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
கமலம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க சண்முக தாய், ஜானகி அமுதா, வீரபாண்டி, இராம லெட்சுமி, கண்ணன், சசிகலா, சேகர், தங்கப்பெருமாள், உமாதேவி ஆகியோர் பதவி ஏற்றனர். பஞ்சாயத்து கிளார்க் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


