கருங்குளம் ஒன்றியத்தில் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் வெற்றி பெற்றார். இவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.
உதவி தேர்தல் அலுவலர் ஆயிஷா பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். சேக் அப்துல் காதர் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க இப்ராகீம், செய்யது அலி பாத்திமா, மரியம் பானு, முகம்மது பாத்திமா, செய்யது பாத்திமா, அப்துல் கனி, சுகைதா, மாடக்கண்ணு, மகேஷ் ஆகியோர் உறுப்பினர்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர்.
முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்தீபன், ஜமாத் தலைவர்கள் முகமது உதுமான், அன்வர் , முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முகம்மது ஹனீபா, ஷாகீர் உசேன், முன்னாள் கவுன்சிலர் இமாம் அலி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணன், பஞ்சாயத்து கிளார்க் ஹரிஹர சுந்தரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


