தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கால்வாய் கிராமத்தில் உள்ள அருள்மிகு எம்பெருமானார் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட புல எண் 13, 14, 16 இல் சுமார் 6 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டறியப்பட்டது.
நிலத்தின் மதிப்பு 42 இலட்சம் ஆகும். மேற்கண்ட நிலங்களை புலத்தணிக்கை செய்யப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
இந்த அளவீட்டின் போது திருக்கோயில் அறங்காவலர் சுடலைகண்ணு, தனி வட்டாட்சியர் ஈஸ்வர நாதன், ஆய்வர் நம்பி, நில அளவர்கள் ஜெகன் ராஜ், ஆனந்தகுமார், பூல்பாண்டி, முத்துசெல்வம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ், திருக்கோவில் பணியாளர் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர். இது தொடர்பாக தனிநபர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர்கணேஷ், முன்னிலையில் பேசப்பட்டதில் கோயில் நிலங்களை கோயிலுக்கே ஒப்படைப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நிலங்களை அளவீடு செய்து திருக்கோவில் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மேற்கண்ட நிலங்களை முதன்முறை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் 42 லட்சம் நிலங்கள் மீட்கப்பட்டன.


