தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் 3-ஆவதாக ஒரு புதிய அணி உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புதுக்கோட்டையை சேர்ந்த திருமண்டல திருச்சபை வாக்காளர்களான அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் நிறுவன தலைவர் கப்பல் பி.இ.ஜெ.ராஜன், நோவா கோவில்பிள்ளை ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது : “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல இதில் 2 அணிகள் போட்டியிட போவதாக அறிகிறோம். இந்த 2 அணியினரும் அடிக்கடி மாறிமாறி கோர்ட்டுக்கு சென்றதால், திருமண்டலம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்தக்கூடாது என்றும், துணை மாடரேட்டர் நியமித்த தீமோத்தி என்ற பேராயரால் தேர்தல் நடக்க வேண்டும் என்றும் ஒரு அணியினர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இதற்கிடையே, தூத்துக்குடி அலுவலகத்தில் தேர்தலை நடத்தும் நீதிபதியான ஜோதிமணியின் காரை மறித்து ஒரு பிரிவினர் தகராறு செய்த சம்பவமும் ஒருமுறை நடந்துள்ளது.
இந்த தேர்தலுக்காக,10 நாட்களுக்கு முன்பு தேவாலயங்களில் வாக்காளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது அதாவது தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு சந்தா ரூபாய் 600 கட்டியவர்களும், திடப்படுத்துதல் ஞானஸ்தானம் எடுத்தவர்களும் கிறிஸ்தவ மதத்தில் திருமணமானவர்களும் வேட்பாளராக நிற்க 3 சான்றிதழ்களும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது.
ஆனால், அதற்கு வாக்காளர்கள் எந்த நிபந்தனையும் இன்றி திடப்படுத்துதல் எடுத்து 10 நாட்களுக்கு முன்பு கோவில்களில் வாக்காளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது அதாவது தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு சந்தா ரூபாய் 600 கட்டியவர்களும், திடப்படுத்துதல் ஞானஸ்தானம் எடுத்தவர்களும் கிறிஸ்தவ மதத்தில் திருமணமானவர்களும் வேட்பாளராக நிற்க மூன்று சான்றிதழ்களும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது. ஆனால் அதற்கு வாக்காளர்கள் நிபந்தனை இன்றி திடப்படுத்துதல் எடுத்து, 3 வருடமாக ரூ. 600 கட்டியவர்களின் லிஸ்ட் போடப்பட்டது.
இந்த சூழலில்தான், புதுக்கோட்டையில் இருந்து திருமண்டல பெருமன்ற (டி.சி.) உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பின்னர் இந்த உறுப்பினர்கள்தான், பேராயாரையும், லே செயலாளரையும் தேர்ந்தெடுப்பதால், இந்த டி.சி. உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் கவனிப்பு இருக்கும் என்பதால், டி.சி. உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய கிராக்கி ஏற்படும்.
ஏற்கனவே, இதுபோன்ற டி.சி. உறுப்பினர்களால் இந்த திருமண்டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபச்சந்திரள் என்ற முதல் பேராயர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். தொடர்ந்து 2வது பேராயராக இருந்த தேவ சகாயம் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், இதனை அடுத்து பேராயர் இல்லாததால், கன்னியாகுமரி பேராயர், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்துக்கு பொறுப்பு பேராயராக இருந்தார். பின்னர் அவரும் ஓய்வு பெற்றார்.
கடவுளுக்கு கொஞ்சமும் பயம் இல்லாமல், அரசியலை போன்றே, இந்த திருமண்டலத்திலும் பணம் விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவேதான், நல்லவர்களையும், விலை போகாதவர்களையும் தேர்ந்தெடுத்து, குருவானவர் தலைமையில் வரவு செலவு செய்யும் கமிட்டியை செயல்பட வைக்க ஆதரவு கேட்கிறோம். எங்களை 3-வது அணி என்று குறிப்பிட்டு விடக்கூடாது. நாங்கள்தான் முதலாவது அணி. அதுவும் முத்தான அணி” என தெரிவித்தனர். தற்போது பால்சாமி உடன் இருந்தார்.


