கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தூத்துக்குடி திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வர் கோயில் அறங்காவலரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு நேரில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேதவீரபாண்டீஸ்வரர் ஆலயங்கள் உள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த ஆலயங்களில் திருப்பணி செய்தவற்காக மாவட்ட அளவிலான கமிட்டி கூட்டத்தில் அனுமதி பெற்று, மாநில அளவிலான கமிட்டி அனுமதிக்கு சென்றுள்ளது. அவர்கள் கூடுதல் ஆவணங்கள் கேட்டுள்ளனர். அதையும் அறநிலையத்துறை அலுவலர் மூலம் கொடுத்து அனுமதி கோரியுள்ளோம்.
இந்த மூன்று கோயில்களும் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிசேகம் செய்ய தமிழக அரசு , இந்த அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்து, இந்த பகுதி மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் லெட்சுமி நரசிம்மர் கோயில் எங்கள் ஊரில் மட்டுமே உள்ளது. எனவே இந்த கோயிலில் கும்பாபிசேகம் செய்து தந்தால் ஆண்டாண்டு காலம் தங்கள் பெயர் நிலைத்து நிற்கும். எனவே ஆவண செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.
என்று கூறியிருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவண செய்வதாக வாக்களித்தார்.
அப்போது ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாநில வர்த்தக அணி அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, இசக்கிபாண்டியன், சுரேஷ் காந்தி, பொதுக்குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


