செய்துங்கநல்லூரில் தமிழர் விடுதலைக் களம் சார்பாக செயற்குழு கூட்டம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செம்பூர் ரமேஷ், கருங்குளம் ஒன்றிய செயலாளர் மரிய ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவனர் இராஜ்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுந்தரலிங்க குடும்பர் , வடிவு நாச்சியார் பெயரை தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்துக்கு சூட்ட வேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனார் பெயரை மதுரை விமாமன நிலையத்துக்கு சூட்ட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனாருக்கு நினைவு மண்டப பணிகளை தமிழக அரசு துவங்க வேண்டும். அவரது நினைவு நாளையும், தளபதி வெண்ணி காலாடி நினைவு நாளை தமிழக அரச அரசு விழாவாகவும் அறிவிக்க வேண்டும். தாசன் ராமசாமி பன்னாடி அவர்களுக்கு மணி மண்டபம் கடட வேண்டும்.தென்மாவட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


