தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மீட்பு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் பல்வேறு மீட்பு உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன. அதில் 10 பேர் செல்லக்கூடிய ரப்பர் படகு, 3 என்ஜின்கள், மரம் வெட்டும் கருவி, 6 வாக்கி டாக்கி, டார்ச்லைட் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 பேரிடர் மீட்பு உபகரணங்கள் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசனிடம், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
இந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி, ராஜூ மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த உபகரணங்களை தேவைப்படும் தீயணைப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


