கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது ரோடு சந்திப்பு பகுதியில் கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பையுடன் ஒருவர் நடமாடி கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து பையை சோதனை செய்தனர். அந்த பையில் தடை செய்யப்பட்ட 70 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் அந்த புகையிலை பொருட்கலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் முருகேச பாண்டியன் (59) என்பதும், வியாபாரியான இவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேச பாண்டியனை கைது செய்தனர்.


