தூத்துக்குடி தெற்கு கல்மேடு அணைக்கட்டு பகுதியில் புதையுண்ட, நாவுக்கரசரால் உழவாரப்பணி செய்யப்பட்ட 6-7ம் நூற்றாண்டின் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது “சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் உருவச் சிலைகள் மற்றும் ஓவியங்களில், அவரது கைகளில் பொதுவாக பின்வரும் பொருட்கள் காணப்படுகின்றன . அவை முறையே இடப்பக்கம்: ‘உழவாரக் கருவி’ அல்லது ‘உழவாரப் படை’ (கோயில் வளாகங்களைத் தூய்மை செய்யப் பயன்படுத்தப்படும் கருவி).
வலப்பக்கம்: சருகுகள், இலைகள் போன்றவற்றைத் திரட்டி அகற்ற உதவும் ‘முள் தடி’ அல்லது ‘துடைப்பம்’. கோயில் உழவாரப் பணியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் குறிக்கும் விதமாகவே இத்தகைய அடையாளங்கள் அவரது திருவுருவங்களில் சித்தரிக்கப்படுகின்றன.
எனவே இத்தகைய குறியீடுகள் நமது தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரின் சற்றே வடமேற்கு பகுதியில் 3.3கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வடக்கு கல்மேடு பெருமாள் ஆலயத்தில் காணப்படுவது என்பது நமது நாவுக்கரசரால் உழவாரப்பணி செய்யப்பட்ட சிவாலயத்தின் அடையாள சின்னமாக உள்ளது என்பது பேராசிரியர் இரா.மதிவாணன் அய்யாவின் மாணவர் சேஷாத்திரி ஸ்ரீதரன் ஆய்வின் வெளிப்பாடு…
இவரது காலகட்டம் கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு. இவர் தேவார மூவரில் ஒருவர், இவரே அப்பர், மருள்நீக்கியார் என்றும் அழைக்கப்படுகிறார்; இவர் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாறி, சிவ ஆலயங்களைத் தூய்மை செய்யும் உழவாரத் தொண்டுகளைச் செய்து, தனது பாடல்களால் (தேவாரப் பதிகங்கள்) சிவபெருமானைப் போற்றி, சைவத்தைப் பரப்பிய நாயனார் ஆவார், இவரது வாழ்வில் பல இன்னல்களைக் கடந்து, கல்லையும் மிதக்கச் செய்த ஈசனருளைப் பெற்றவர்.
ஏற்கனவே நாம் இவ்வாலயத்தின் மேற்கில் அமைந்துள்ள ஆங்கிலேயர்கள் கட்டிய கல்மேடு தடுப்பணையை பலப்படுத்தும் பணிக்காக சுமார் 10அடி ஆலம் தோண்டப்பட்ட நீண்ட பல்லத்தில் 4 அடி ஆழத்திற்கு கீழே சுமார் 200 அடி நீளத்துக்கு பல்லவர் காலத்தில் உள்ளது போன்ற சிற்பங்கள் மற்றும் குறியீடுகள் உடன் அமைக்கப்பட்ட மதில் சுவற்றினை கண்டறிந்து ஆவணப்படுத்தி மாவட்ட ஆட்சியர் வாயிலாக மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறைக்கு அகழாய்வு செய்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது நமது கருத்துகளை உறுதி செய்வதாக அமைகிறது.
இத்தகைய தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஆலயத்தின் சிதைவில் இருந்து கொண்டு வரப்பட்டு 1812ம் ஆண்டு இந்த பெருமாள் ஆலயமானது புணரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்பதும், இத்தகைய பெரிய ஆலயங்கள் அமையப்பெற்ற இந்த பட்டினம் மருதூர் சார்ந்த பகுதிகளே நமது தென்மதுரை என்பது புலனாகிறது என்றார்.


