கவிஞர் சிற்பி பாமா தாயார், சொர்ணத்தம்மாள் 49 – வது நினைவு நாள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில், நடைபெற்ற இந் நிகழ்வில், தேசிய நல்லாசிரியர் சு. செல்லப்பா தலைமையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர், முனைவர் சி.சுதாகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, துப்புரவுப் பணியாளர் அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கி சிறப்பித்தார்கள். நிகழ்வில், 13 – வது வார்டு மன்ற உறுப்பினர் சங்கர் , நூலகர் முத்துகிருஷ்ணன்,நல்லமுத்து, வெற்றிபாண்டியன், மேஸ்திரி முருகன், அலுவலகப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கவிஞர் சிற்பி பாமா நன்றி கூறினார்



