சாத்தான்குளத்தில் லாரி ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகையைச் திருடிய மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தெற்கு ரதவீதியை சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் முருகன் (48). இவா் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மல்லிகா களக்காட்டுக்கும் சென்று விட்டனராம். மகள் பரமேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்துள்ளாா்.
அவா் வீட்டுக்கு வெளியே பாத்திரம் கழுவி விட்டு வந்த போது, வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி , ஒரு பவுன் தங்க மோதிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்ததாம். இதுகுறித்து முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.


