தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு விழா நடந்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் இந்த சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடத்திய தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் நியமனம் தூத்துக்குடி உதவி ஆணையர் தி. சங்கர் அவர்கள் நடவடிக்கையின்பேரில் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.
முறப்பநாடு கைலாசநாதர் ஆலயத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவிற்கு, மாவட்ட அறங்காவலர் பார்த்திபன் தலைமை வகித்து பதவிக்கான உத்தரவை வழங்கினார்.ஆய்வாளர் நம்பி, நிர்வாக அதிகாரி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் கோயில் அறங்காவலராக முத்தாலங்குறிச்சி காமராசு, லெட்சுமி நரசிம்மர் கோயில் அறங்காவலராக வள்ளிநாதன், ராமவிநாயகர் கோயில் அறங்காவலராக சுடலைமணி ஆகியோருக்கு உத்தரவு வழங்கப்படடது. முறப்பநாடு லெட்சுமி நாரயணன் பெருமாள் கோயில் அறங்காவலராக பார்த்தசாரதிக்கும் உத்தரவு வழங்கப்பட்டது.
முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அறங்காவலர் உறுப்பினராக சங்கர், பேச்சியம்மாள், மாரியப்பன் ஆகியோருக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கோயிலுக்கு அறங்காவலர் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு கோயிலில் கைலாசநாதர், சிவகாமி அம்மாள் சமேத பரிவார தெய்வங்களுககு சிறப்பு அபிசேகம் , அலங்காரம் நடந்தது.
தென் காசி என சிறப்புடன் வடமுக ஆறாக ஓடும் தாமிரபரணியை கொண்ட முறப்பநாடு கைலாசநாதர் ஆலயத்திற்கு வந்த மாவட்ட அறங்காவலர் பார்த்திபனை திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் வரவேற்றனர். அதன் பின் அவர் தாமிரபரணி ஆற்றினை பார்வையிட்டார். அங்கு அடர்ந்து கிடக்கும் அமலை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள் முருகானந்ததாஸ், விசுவநாதன், இசக்கி பாண்டி, கோயில் அர்ச்சகர் செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


