ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுவாமி நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்குகிறது.
சுவாமி நம்மாழ்வார் அவதார தினமான வைகாசி விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மே மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 5ம் நாள் நவதிருப்பதி சுவாமிகளுக்கு நம்மாழ்வா£¢ மங்களாசானசமும், நள்ளிரவில் கருட சேவையும் நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடந்தது. பின்னர் சுவாமி நம்மாழ்வார் ததேரில் எழுந்தருளினார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மேலரதவீதி, கீழரதவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்த மீண்டும் நிலையம் வந்தடைந்தது.


